#அம்மா_வழியில்_அமமுக..!!!✍
தெய்வத்தாய், சமூக நீதி காத்த வீராங்கனை, சில அராஜக ஆதிக்கத்தால் தன் மீது ஏவப்பட்ட சோதனைகளை எல்லாம் சாதனைகளாய் மாற்றி சரித்திர வெற்றி கண்ட இரும்பு மங்கை நம் #புரட்சித்தலைவி அம்மா அவர்கள்..!!!
தாயின் மறைவிற்கு பிறகு தலை கவிழ்ந்து கிடக்கும் தமிழகத்தின் தன்மானத்தை தலை நிமிர்த்த , தாயின் கொள்கைகளை தன்னுள் வாங்கி ஓய்வின்றி உறங்காமல் பயணிக்கும் உத்தமத்தலைவன் எங்கள் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்கள்..!!!!
தமிழ்நாட்டின் முதுகெலும்பாம் விவசாயம் , விவசாயம் தழைத்தோங்க, விவசாயி வளம் பெருக வேண்டி அண்ணன் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு திட்டமும் திகட்டாத நற்செய்தியாய் ஏழை விவசாயிகளுக்கு அமைந்தது..!!!
சூது கவ்வியதால், சுயநலம் சூழ்ந்ததால் ஏற்பட்ட மாற்றத்தால் நாங்கள் தோற்றுவிடவில்லை, எங்களது வெற்றி சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு மட்டுமே உள்ளது, எந்த நிலையிலும் எதற்கும் கலங்காமல், இன்முகம் மாறாமல் காலத்தின் கட்டளையை கலங்காமல் ஏற்கும் காலத்தின் தலைவன் எங்கள் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்கள்..!!!!
தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை அழிக்க கூடிய கார்ப்பரேட் களவாணிகளின் #ஹைட்ரோகார்பன் போன்ற தமிழக மக்களுக்கு எதிராக அமல்படுத்தப்படும் ஒவ்வொரு அழிவுத்திட்டத்திற்கும் எதிராக ஓங்கும் குரலில், அழுத்தமான முதல் குரலுக்கு சொந்தக்காரார் எங்கள் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்கள்..!!!
குழந்தைகளின் கனவுக்கு குழி தோண்டும் வேலையை குறைவின்றி அரங்கேற்றும் அராஜக ஆட்சியை எதிர்த்து #NEET க்கு எதிராக நெஞ்சம் நிமிர்த்து போராடும், இந்தி மொழித்திணிப்பால் ஏழை குழந்தைகளின் கல்விக் கனவுகளை கலைக்கத்துடிக்கும் ஆளுமையின் அராஜகத்தை எதிர்த்து நிற்கும் ஒரே ஆண்மகன் எங்கள் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்கள்..!!!!
தமிழகத்திற்கு பட்டங்களும், பதக்கங்களும் பெற்றுத்தரக்கூடிய ஒவ்வொரு தமிழக வீராங்கனைகளுக்கும் தவறாமல் ஊக்கம் கொடுத்து முதல் ஆளாக பாராட்டும் மண்ணின் மைந்தன் எங்கள் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்கள்..!!!!
#சாதிக்கட்சி என்று கழகத்தின் மீது சாதிய சாயம் பூசத்துடிக்கும், நேரத்திற்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்திகளின் முகத்தை கிழிக்கும் வண்ணம் மாபெரும் #அருந்ததியர்_மாநாட்டை தலைமை தாங்கி ஆர்ப்பாட்டமாக நடத்திக்காட்டி மிரள வைத்த அந்த ஆளுமையின் அசாத்திய தோரணை யாருக்கு வரும்., சரித்திரம் திரும்பி பார்க்க கூடிய #போராளிகளை சாதியம் பார்க்காமல் மக்களின் நலனுக்காக உயிர் நீர்த்த அந்த உன்னத தியாகத்தை மட்டும் கருத்தில் கொண்டு, நமது முன்னோர்களின் சிலைகளுக்கு அத்தனை எதிர்ப்பையும் தாண்டி, கொண்ட கொள்கைக்கு குறைவின்றி தலைவர்களின் சிலைகளுக்கு சென்று மாலையிட்டு முதல் மரியாதை செலுத்தும் பெரும் நற்குணத்திற்கு சொந்தக்காரர் எங்கள் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்கள்..!!!!
இரக்கமில்லாமல் இயற்கை சீற்றங்கள் வந்து இடியாலும், மழையாலும், புயலாலும் ஏழை மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச்செய்த போதெல்லாம் இருந்த இடத்தில் இருந்து கொண்டு ஆறுதல் கடிதம் அழுங்காமல் வாசிக்காமல், அடுத்த நொடி அந்த இடம் நோக்கி எத்தனை மைல்கள் தாண்டியும் எம்மக்கள் துன்பத்தில் நிச்சயம் உடன் இருப்பேன் என்று ஊர் ஊராய் பயணப்பட்ட ஒரே தலைவன் மக்கள் செல்வர் #டிடிவி_தினகரன் அவர்கள்..!!!!
✍விவசாயம்
✍கல்வி
✍சமத்துவம்
✍இயற்கை சீற்றம்
✍அடக்குமுறைக்கு எதிரான குரல்
✍மக்களுக்கான பயணம்
✍ஊக்கம்/பாராட்டு
இப்படி அனைத்திலும் அம்மா உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அவற்றை எல்லாம், ஆட்சி இல்லை அதிகாரம் இல்லை ஆனால் அண்ணனின் கடைக்கண் பார்வைக்கு கட்டுப்பட்டு ஆழியையே புரட்டிப்போடும் அன்புத்தம்பிகளின், தொண்டர்களின் பேர் ஆதரவுடன் அனைத்தையும் அகமகிழ்விடன் செய்து கொண்டிருக்கின்ற ஒரே கழகம்.,தாயின் முகத்தை கொடியில் தாங்கி, தெய்வத்தாயின் நினைவுகளை மனதில் தாங்கி பயணிக்கும் ஒரே கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மட்டுமே என்பதில் துளியும் மாற்றுக்கருத்து இல்லை..!!!!
என்றும் அம்மாவின் கொள்கைகளுடன்..🔥
அண்ணன் வழியில் பயணம்..🔥
அதுவே எங்கள் மனம் நிறையும்..🔥
காலம் மாறும் காட்சியும் மாறும்..🔥
அன்று தாய்க்கழகம் எதுவென்று..🔥
தரணி முழுவதும் உணரும்..🔥



