எனக்கு பிடித்த மக்கள் செல்வர் - நமதுஎம்ஜிஆர் நாளேட்டில்




அம்மா என்ற ஆளுமை மறைந்த பிறகு அடுத்து நம்ம அரசியல்தான் என்று இலவு காத்த கிளியாய் இருந்த தலைவர்கள் மத்தியில் , சுயநலத்திற்காக அடிமைகளாய் போன அரசியல்தலைவர்கள் கனவை *தகர்த்தெறிந்த வீர தலைவனாய்* உங்களை கண்டேன்.


தெளிவான சிந்தனையும், நேர்கொண்ட பார்வையும், எடுத்த முடிவில் இருந்து ஒரு போதும் பின்வாங்காமல், *தடுமாறாமல், தடம் மாறாமல்,* உன்னதமான உழைப்பையும், உண்மையுள்ள தலைவனாய் உங்களை கண்டேன்.



*தமிழக நலன்களை* சுயநலத்திற்காக அடகு வைத்து அடிபணிந்து இருக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு முதலில் களத்தில் இறங்கி போராடும் *போராளியாகவும் எதிர்த்து* நின்று குரல் கொடுக்கும் ஆளுமைக்கு ஓரு எடுத்துக்காட்டு நீங்கள்.


எத்தனையோ அடக்குமுறைகள் வந்தாலும் "என்னை 25 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் மீண்டும் வெளியில் வந்து *மக்கள் நலனுக்காக அரசியல்* செய்வேன்" என்று முழக்கமிட்ட தலைவர்.


நீட் தேர்வில் உயிரிழந்த மாணவி அனிதா "என் அன்பு மகள் அனிதா" என ஆரத் தழுவிய பாசத்தில் *"அம்மாவின் வடிவில் ஒரு* அண்ணனை கண்டேன்"


"பூமிக்கு அடியில் வைரமே கிடைத்தாலும் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டோம்" என்று *ஹைட்ரோகார்பன், மீத்தேன், கூடங்குளம் அணுமின் நிலையம், எட்டு வழி சாலை* போன்ற பல திட்டங்களுக்கு எதிராக போராடி விவசாயத்தை காக்கவும், மக்களின் நீராதாரத்தை காப்பாற்ற காவேரி நீருக்காக குரல் கொடுத்த தலைவர்.


கல்வி பயிலும் *மாணவர்களுக்காக மூன்றாம்* வகுப்பு, ஐந்தாம் வகுப்பு பாடத்திட்ட மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேவையில்லை என்றும் மேலும் தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டபோது அதை ஆராய ஒரு சிறப்பு குழுவை அமைத்து *கல்விக்கொள்கையில்* செய்யவேண்டிய திருத்தங்களை செய்து பொது அறிக்கை சமர்ப்பித்த தலைவர்.


துண்டு சீட்டு எழுதி கொடுத்தாலும் உளறும் தலைவர்கள் மத்தியில் தான் சொல்லும் வார்த்தையில் *புன்சிரிப்போடு ஊடகங்களை* எதிர் கொள்ளும் சாமர்த்தியம் உள்ள தலைவர்.


*புரட்சி தலைவர்* போல செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நின்றாலும் அவர்கள் குறையை கேட்டு முயன்ற உதவியை உடனே செய்யும் தலைவர்.


ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரத்திற்குமேல் உழைக்கும் ஆற்றளுடன் " *எனக்கு பின்னாலும்* 100 ஆண்டுகள்" என்ற அம்மாவின் ஆசையை 1000 ஆண்டுகள் வரை செயல்படுத்தும் தொலைநோக்கு பார்வை உள்ள தலைவர்.


*இளைஞர்களின் எழுச்சி* நாயகனாய், எளிய தலைவனாய், அனைவருக்கும் சுயமரியாதை அளிக்கும் *நல்ல மனிதராய்,* இருப்பதால் தான் என்னவோ எனக்கு மட்டுமல்ல கோடான கோடி இளைஞர்கள் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கின்றார்கள்.


எனக்கு பிடித்த மக்கள் செல்வர் என்பதை விட " *மக்களால் நான்; மக்களுக்காக நான்"* என்று வாழும் மக்களுக்கு பிடித்த மக்கள் செல்வர்.


நன்றி *Mrs.N.M. சங்கீதா, B.sc(CS), M.S(IT), M.Phil(CS) HDCA,(Ph.D(CS)). தகவல் தொழில் நுட்ப பிரிவு(மகளிர் ), வட சென்னை வடக்கு மாவட்டம்.





 

Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image