#இது ஆளுமையின் ராஜ்ஜியம்...
அமமுக இன்னும் பதிவு செய்யப்படாத கட்சி.. சின்னம் இல்லை என்று புரளி பேசும் அடிமை ராஜ்ஜியத்திற்கு..
ஒரு குட்டிக்கதை சொல்லட்டா...
இளஞ்சேட்சென்னி என்கிற சோழ மன்னன் வீரத்திற்கும், நல்லாட்சிக்கும் பெயர் பெற்றவன். திடீரென நோய்வாய்ட்ட மன்னன், இனி பிழைக்க வாய்ப்பில்லை என வைத்தியர்கள் கூறிவிட்டதால், மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். மன்னனுக்கு குழந்தைகள் எதுவும் இல்லாததால், சோழ வம்சம் இளஞ்செட்சென்னியோடு முடிந்து விடுமோ என அனைவரும் வருந்தினார்கள். அப்போதுதான் துயரத்தில் இருக்கும் அம்மக்களுக்கு, ஒரு நற்செய்தி கிடைத்தது.
ஆம் அரசி கருவுற்றியிருந்தாள். இந்த செய்தி பெருமகிழ்ச்சியை தந்தாலும், அதை உடனடியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஏனென்றால் இது தெரிந்து, பக்கத்து நாட்டு மன்னர்கள் போர்தொடுத்து குழந்தையை கொல்ல முயல்வார்கள் என்பதற்காக தான்.
அதன்படியே குழந்தை பிறக்கும் வரை ராணியை தனிஇடத்தில் வைத்து பாதுகாத்து வந்தார்கள்,
அந்நாட்டு மக்கள். ராணிக்கு பிரசவ வலி வந்த போது கூட , குறிப்பிட்ட நாழிகையில் பிறந்தால் ராஜயோகம் கிடைக்கும் என்பதால் அந்த நாழிகையிலயே குழந்தை பிறக்க செய்யும் படி வைத்தியர்களை கேட்டுக்கொண்டார்கள். அதன்படியே தான் குழந்தையும் பிறந்தது.
ஆக பிறக்கும் முன்னரே, தாயின் கருவில் இருக்கும்போதே, என் மன்னன் இவன் தான், எங்களை ஆளப்போகிறவன் இவன் தான் என ஒரு நாடே ஒரு குந்தையை கொண்டாடி மகிழ்ந்தது. அந்த குழந்தை தான் பின்னாளில் சரித்திர புகழ்பெற்ற கரிகால சோழன்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வழி நடத்திச் செல்லும் "டிடிவி தினகரன்" அவர்களும் கரிகால சோழனை போன்றவர் தான். சரியான ராஜயோக நேரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் பிறக்கும்.
இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் முன்னரே, இந்த நாட்டை ஆளப்போகும் கட்சி என மக்களால் கொண்டாடப்படுகிற ஒரு இயக்கம், சோழனை போன்றே சரித்திர புகழை பெறப்போகும் இயக்கமும் இதுதான்.
எனக்கு பிறகும் நூறாண்டுகள் என்கிற அம்மாவின் கனவை நனவாக்குகிற இயக்கம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்....
இது கதையல்ல, நீங்கள் பார்க்க போகும் நிஜம்..



