தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?



தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளமான www.ncs.gov.in அல்லது தமிழக ஊரக வளர்ச்சி துறையின் www.tnrd.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அந்தந்த மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வு செய்ய வேண்டும்.


பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படித்து அறிவிக்கப்பட்டுள்ள காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 


தகுதி வாய்ந்தவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தில் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைக்கான ஆதார சான்றிதழ்களை கண்டிப்பாக இணைத்து பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


* விண்ணப்பிப்போர். ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். 


* ஒரே விண்ணப்பித்தின் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


விண்ணப்பதாரர்கள் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிப்பவராக இருக்க  வேண்டும்.


தகுதியான விண்ணப்பத்தாரர் சம்மந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.


* அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பினபற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 2017 திருத்திய ஊதியக்குழு விதிகள் கீழ் ஊதியம் அட்டவணை படி ரூ.15,900-50,400, குறைந்பட்சம் ரூ.15,900 மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும். 


* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ வரும் 25.11.2019 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்முகத் தேர்வு கடிதம் அனுப்பி வைக்கப்படும்.








Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image