ஒரு சீன விவசாயி மூங்கிலை விதைத்தான்.
அதற்க்குத் தண்ணீர் ஊற்றினான். உறம் போட்
டான். நாள்தோறும் தண்ணீர் ஊற்றினான். ஒரு
மாதமாயிற்று. அங்குஎதுவும் முளைக்கவில்லை.
இரண்டு மாதமாயிற்று, ஒன்று மில்லை. ஓர் ஆண்
டாயிற்று ஒன்றுமில்லை. எல்லாரும் கிண்டலும்,
கேலியும் செய்தார்கள். நாள் தவறாமல் நீர் ஊற்றி
வந்தான். இரண்டாண்டுகளாகியும் ஒன்றுமில்லை.
மூன்றாண்டாகியும் ஒன்றுமில்லை. குடும்பத்தார்,
மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளோர் அனைவரும்
கிண்டலும், கேலியும் செய்தனர்.
ஐந்தாண்டிற்குப் பிறகு முளைவிடத் துவங்கியது.
விவசாயி பார்த்தமாத்திரத்தில் மகிழ்ச்சியில் பாடி
னான், ஆடினான். கிராமத்தில் உள்ளோரை அழைத்
தான். எல்லாரும் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
வளர்ந்தது, வளர்ந்தது, வளர்ந்தது, எப்படி
வளர்ந்தது என்றால் 6-வாரத்தில் 90-அடி உயரத்
திற்கு வளர்ந்தது. பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
மற்றவர்களும் வளர்க்கத் துவங்கினார்கள்.
மூங்கில் விதை நிலத்திற்கு மேல் முளைவிட்டு
வளர ஐந்தாண்டு காலத்தை ஏன் எடுத்துக் கொண்
டது என்றால், 90 அடி உயரம், அடர்த்தியான மரங்கள்
இவை எந்தப் புயலாலும் மழையாலும் எந்தவித பாதி
ப்பும் ஏற்படாமல் இருக்க, பூமிக்கடியில் பரவலாகவும்
ஆழமாகவும் வேர்களைச் செலுத்தி தன்நிலையை
உறுதி படுத்தியப் பிறகு பூமிக்குமேல் வளர்ச்சிப்
பணியை செய்திருக்கிறது. வேர்களை ஊன்ற
ஐந்தாண்டுகளை எடுத்துக் கொண்டது.
நம் கழகமும் நாமும் ஆட்சி கட்டில் நோக்கி முன்னேற வேண்டுமென்
றால் திட்டமிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
சோதனைகளை நடத்திப் பார்க்கவேண்டும். அதற்கு
நிறைய காலங்களை எடுத்துக் கொள்ளலாம். வெற்றிகளை உறுதி செய்துக் கொண்டு செயல்
பட்டால் முன்னேறுவது நிச்சயம்.TTV எனும் நான் என்ற வார்த்தையை கேட்க ஏங்கும் என் காதுகள்...



