ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்


 


ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 22-ந்தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை 69,500 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தபால் வாக்குகளை மீண்டும் எண்ணவும், 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ணவும் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 4-ந் தேதி ஐகோர்ட்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.



இதற்கிடையே மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்ககோரி இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஆனால் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்த தடை நவம்பர் 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.



தடை உத்தரவு இன்றுடன் முடியும் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 22-ந் தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.



Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image