அம்மா உணவகம் மிகப் பெரும் நஷ்டத்தில் ஓடுகிறது என்று ஆளும் ஆட்சியாளர்கள் கூறியுள்ளார்கள்..
வசதி படைத்தவர்கள் வார இறுதி நாட்களில் உயர்தர உணவுகளை உன்னும் இதே நாட்டில்தான்...
ஒருவேளை உணவுக்கே அல்லாடும் மணிதர்களும் உண்டு. அவர்களின் பசியறிந்து தாய்மை உணர்வோடு அம்மா அவர்கள் ...2013- பிப்-24 தனது பிறந்த நாளன்று இத்திட்டத்தை ஆரம்பித்தார்.
முதலில் சென்னையில் ஆரம்பிக்கபட்ட இத்திட்டம் படிபடியாக விரிவாக்கம் செய்யபட்டு தமிழகமெங்கும் ஏழை எளியோரின் பசியை போக்கிற்று. அம்மாவின் அரசியல் வெற்றிக்கு இதுவே ஒரு காரணமாககூட அமைந்தது.
இந்த அன்னபூரனி திட்டத்தால் அரசுக்கு லாபம் கிடைக்காது என்று தெரிந்தும்...உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் நடைபெற்று வந்தது..
பல்வேறு மாநிலங்களால் கவரபட்டு வந்த இந்ததிட்டம் இன்று கேட்பாரற்று அனாதையாக நிற்பதை பார்க்கையில் வேதனைதான்.
அம்மாவையே மறந்த இவர்களுக்கு...அவரின் திட்டங்கள் எப்படி ஞாபகத்தில் வரும்.
இத்திட்டத்தை திமுகாவால் முடக்கபட்டால் அது விதி.
அதிமுகாவினரே முடக்கினால் அது சதி.
ஒருவேளை உணவுக்காக ஏங்குவோரின்
வயிறு மட்டுமல்ல...அவர்களின் இயலாமையும் ஒருநாள் சாபமாகும்.



