ஒரு ஊரில் ஒரு சக்திவாய்ந்த முனிவர் இருந்தார் , அந்த ஊரில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த பக்தனிடம் ஒரு இடத்தை காண்பித்து இங்கு தோண்டினால் உனக்கு புதையல் கிடைக்கும் என்று கூறி மறைந்தார்..
உடனே பக்தன் அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தான். சிறிது கஷ்டமாக இருந்தது. 10 அடி தோண்டி விட்டான். எதுவும் கிடைக்கவில்லை. சிறிது நமபிக்கை இழந்தான். மேலும் 5 அடி தோண்டினான். இன்னும் கொஞ்சம் கடினமாக இருந்தது, எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து 3 அடி தோண்டினான். எதுவும் கிடைக்கவில்லை. சுத்தமாக நம்பிக்கை இழந்து விட்டான் . எதோ ஒரு வயசான ஆள் சொன்னத கேட்டு 18 அடி தோண்டி விட்டோம் என்று வருத்தத்துடன் முயற்சியை கை விட்டு சென்றான் .
சில நாட்கள் கழித்து , புதிதாக ஒரு ஆள் அந்த பக்கம் வந்தான். அவன் இந்த குழியை பார்த்து விவரம் கேட்டான். அருகிலிருந்தவர்கள் கூறியதை கேட்டான். முனிவர்கள் வாக்கு பொய்யாகாது என்று நினைத்து முழு நம்பிக்கையுடன்தோண்ட ஆரம்பித்தான் .2 அடி தோண்டியதும் டங் என்ற சத்தம் கேட்டது.மேலும் தோண்டினால் பெரிய பானை நிறைய பொற்காசுகளுடன் புதையல் கிடைத்தது .
இன்றும் அது போல சிலர் அவரசமாக புதையல் தேடியவனை போல் மக்கள் செல்வருடன் பயணித்து உடனடி பலன் கிடைக்கவில்லையே என அவநம்பிக்கையில் மாற்று இயக்கத்திற்கு ஓடுகின்றனர்.
ஆனால் இன்னும் சிறிது நாளில் வாக்கு சீட்டு மூலம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது , சின்னம்மா அவர்கள் கர்நாடக சிறையில் இருந்து வெளி வந்து விடுவார்கள், ஆட்சி முடிந்து சட்டமன்ற தேர்தலும் வந்து விடும் மக்கள் செல்வருடனானபயணம் வீண் போகாது என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் சேர்ந்து பயணிக்கின்றனர்.மேலும் புதிதாக பல இளைஞர்கள் நம்பிக்கையுடன் இணைகின்றனர்.
இவர்கள் மக்கள் செல்வருடன் லட்சிய பயணத்தில் வெற்றி அடைவார்கள். அப்போது விலகி சென்றவர்கள் 18 அடி தோண்டி வருந்தியவனை போல் தங்கள் நிலையை எண்ணி வருந்துவார்கள்...



