*குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு நாளை முதல் 23-ம் தேதி வரை 6 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது* .
சென்னை:
புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வன்முறையாளர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு நாளை முதல் 23-ம் தேதி வரை 6 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



