.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடுமையான இழுப்பறிக்கு பின் கடந்த டிச7ம் தேதி அதிகாரபூர்வமாக பதிவுபெற்ற கட்சி என தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிச9ம் தேதி 27மாவட்டங்களில் தொடங்கியது,
வேட்புமனு தாக்கல் செய்ய டிச16ம் தேதி கடைசி, அதற்குள் 27மாவட்டங்களிலும் கழக வேட்பாளர்கள் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் அவர்களின் அங்கீகார கடிதத்துடன் வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுவை திரும்பபெறும் கடைசி நாளான டிச19ம் தேதியன்று, சொல்லி வைத்த மாதிரி மாவட்டத்திற்கு ஏற்ப தலா இரண்டு சின்னங்களில் போட்டியிடுவதாக தெரிய வருகிறது.
வாக்குபதிவும் இரண்டு கட்டமாக டிச27, டிச30 என இன்று முடிந்து விட்டது.
*இந்த குறிப்பிட்ட 23நாட்களுக்குள் அதிகமான இடங்களில் அதாவது 5208 இடங்களில் போட்டியிட்ட ஒரே கட்சி எனும் மகுடம் நம்மை அலங்கரித்துள்ளது.*
*பெருமைக்காக சொல்லவில்லை, அரசியல் அவரின் இரத்தத்தில் கலந்துள்ளது.*
புது சின்னம், ஆளும் கட்சியின் பணபலம், பல இடங்களில் உட்கட்சி துரோகிகளின் உள்ளடி வேலைகளையும் தாண்டி களத்தில் துணிச்சலாக நின்ற வேட்பாளர்கள்...
*ரிசல்ட் ஜன2, 2020ல் அல்ல, இன்றே, இதுவே மாபெரும் வெற்றி நண்பர்களே!*
ஸ்வீட் எடு, கொண்டாடு.
#AMMK #TTV



