உள்ளாட்சி தேர்தல் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஆளுங்கட்சியினரின் லீலைகளால் பல்வேறு முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்களோடு நடந்து முடிந்து இருக்கின்றது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆளும் கட்சியினர் வாக்குச் சாவடியில் நடந்துகொண்ட விதமும் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய வன்முறை வெறியாட்டங்கள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது.
வாக்குப்பதிவு நாளன்று கூட பணத்தை தண்ணீராக செலவழித்து வாக்காளர்களை வளைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதை பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் மக்களையும் ஜனநாயகத்தையும் ஒரு விளைபொருளாக பார்க்கிறார்கள் என்ற வேதனையான உண்மை புரிகின்றது.
இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் தேர்தல் களத்தில் தேனீக்களால் சுழன்று களப்பணி ஆற்றியமைக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இதே உத்வேகத்துடன் இரண்டாம் கட்ட தேர்தலையும் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



