1986க்கு பிறகு உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தோற்கடிக்கபட்டது எதனால்..
ஆளும் கட்சி அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் பிரதான சின்னங்களாக பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் புதிய சின்னங்களை கொண்டு களத்தில் இறங்கியது அமமுக
உள்ளாட்சி தேர்தலில் பதிவுபெற்ற இரண்டு நாட்களிலேயே களமிறங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தேனீக்களைப் போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு சின்னம் கொடுக்கப்பட்டாலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அடக்கு முறைகளைத் தாண்டி கணிசமான அளவு வெற்றி பெற்று உள்ளது.
எந்தவிதமான பணபலமும் இல்லாமல் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
10 கட்சி கூட்டணிகள் உடன் இருக்கும் திமுக, அதிமுக கட்சிகளை தனி ஒரு கட்சியாக நின்று களத்தில் கதகளி ஆடி உள்ளது அமமுக.
இவிஎம் மின்னணு வாக்கு முறைகேட்டில் நிறைய இடங்களில் ஜீரோ வாக்குப்பதிவு பெற்றது என்பதை இப்பொழுது வாக்குச்சீட்டு முறையில் வெற்றி பெற்று பதிலளித்துள்ளது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பிரபல விஐபி தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளது. அரசியல் ஆளுமை திரு டிடிவிதினகரன் தலைமையில்தான் செயல்படும் என்பதற்கு இதுவே உதாரணம்.
இன்னும் பல இடங்களில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை கைநழுவி இருந்தாலும் மிக குறுகிய காலத்தில் பெற்ற வெற்றி இமாலய வெற்றி என்று கருதப்படுகிறது.
பல இடங்களில் பல இடங்களில் பல இடங்களில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சிம்ம சொப்பனமாகவே அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் இருந்து வந்ததே உண்மை.



