தர்பார் திரைப்படத்தில் குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குநர் முருகதாஸ் மீது வழக்கு போடப்படும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்
பணம் இருந்தால் சிறையிலிருந்து வெளியே ஷாப்பிங் கூட செல்லலாம். ரஜினியின் தர்பார் படத்தில் வசனம்.
தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் சிறையில் இருந்து வெளியே சாப்பிங் சென்றதாக பொய்யான பரப்புரை இதற்கு முன்பு ஊடகங்கள் பரப்பப்பட்டது. அதை குறிக்கும் வகையில் பொய்யான தகவலை மீண்டும் மக்கள் மத்தியில் சினிமா மூலம் பரப்ப தர்பார் படத்தில் வசனங்கள் அமைந்துள்ளது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சர்ச்சைக்குரிய இந்த வசனத்தை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பணம் பாதாளம் வரை பாயும் என்றும் தர்பார் படத்தின் கருத்தை வரவேற்பதாக கூறியதனால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிறையில் இருந்து வெளியேறி திருமதி.சசிகலா அவர்கள் ஷாப்பிங் செல்லவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளார்கள்.
உண்மை தகவலை மறைக்க இது போன்ற பொய் தகவலை திணிப்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.



