யாரெல்லாம் தபால் ஓட்டு பதிவு செய்ய முடியும்?
இந்திய தேர்தல் கமிஷன் இணைய தளத்தில், குறிப்பிட்ட சில வகையான வாக்காளர்கள் மட்டுமே தபால் ஓட்டு பதிவு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்த இணையதளத்தில், ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், கடற்படை மற்றும் விமானபடையில் பணிபுரிபவர்கள், ஆயுதப்படையை சேர்ந்தவர்கள், வெளிநாட்டு அரசு துறையில் வேலை செய்பவர்கள், அதாவது தூதர்கள் மற்றும் ஹை கமிஷனர்கள் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் போன்றவர்கள் தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்குகளை போடலாம் என்று அறிவிக்கப்படுள்ளது.
இருந்தபோதும், இந்த நபர்கள் மட்டுமே தங்கள் வாக்குகளை தபால் ஓட்டுகளாக போடலாம். இவர்கள் வாக்களிக்க வாக்குசாவடிக்கு நேரடியாக செல்ல தேவையில்லை. மேற்குறிப்பிட்ட நபர்களின் மனைவிகளும் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்கள்
தேர்தல் வாக்கு பதிவு பணியில் இருப்பவர்கள், அதாவது, வாக்குபதிவு செய்யும் ஏஜென்ட்கள், வாக்குபதிவு அதிகாரி மற்றும் பொது துறையில் வேலை பார்ப்பவர்களும் தபால் ஒட்டு போட அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் பணியின் காரணமாக நேரடியாக வாக்குசாவடிக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியாது. குறிபிட்ட வாக்களார்கள் வகையை பொறுத்து, ஒருவர் தேர்தல் ஆணையத்தால் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே தபால் வாக்கு பதிவு செய்ய முடியும்.
இதுமட்டுமின்றி கைதிகள் தங்கள் ஓட்டுகளை அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களும் தங்கள் வாக்கை தபால் வாக்காகவே பதிவு செய்ய முடியும்..
தபால் ஓட்டுக்கள் போடுபவர்கள்,அதிகபட்சம் படித்தவர்களாக இருக்கின்ற போது,
இந்த தபால் ஓட்டுக்கள் 90%மேல் எப்படி செல்லாத தபால் ஓட்டுக்காக மாறியது..! என்ற கேள்விகள் மக்களிடையே பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தபால் ஓட்டுக்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்படுகிறதா செல்லாமல் செய்யப்படுகிறதா என்ற பல சந்தேகங்கள் மக்களிடையே இருக்கிறது..



