தந்தை பெரியார் அவர்கள் சமூக நீதிப் போராளி, ஜாதியை எதிர்த்து போராடியவர், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடியவர், பெண்களின் உரிமைக்காகப் போராடியவர், பெண்களின் கல்விக்காக போராடியவர்.
சமுதாயம் மேம்பட வேண்டும் என்று தன்னுடைய இறுதி மூச்சுவரை போராடிய அவர் எல்லோராலும் மதிக்கப்பட கூடிய தலைவராக வாழ்ந்து மறைந்தவர் பெரியார்
பெரியாரைப் பற்றி பேசுகிறபோது தவறான தகவலின் அடிப்படையில் உண்மைக்கு புறம்பாக ரஜினிகாந்த் பேசியிருப்பது வருத்தமளிக்கிறது,அது கண்டனத்துக்குரியது
தந்தை பெரியார் தனி மனிதர் அல்ல அவர் ஒரு இயக்கம் தமிழக மக்களின் நலனுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி உழைத்தவர்
பெரியார் போன்ற தலைவர்களைப் பற்றி பேசும்போது யோசித்து, உண்மையான தகவல்களை கேட்டுதெரிந்து ரஜினிகாந்த் பேசி இருக்கலாம்
40 ஆண்டு காலமாக இருக்கும் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், அவரோடு இருக்கும் தமிழருவி மணியன் போன்றோரிடம் கேட்டிருந்தால் கூட உண்மை நிலை தெரிந்திருக்கும்
பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் கூட பெரியாரை மதிப்பவர்கள் தான் , இதுபோன்ற கருத்துக்கள் கண்டனத்திற்குரியது
குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரத்தின் படி தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு குறித்த கேள்விக்கு
காவல் துறை சிறப்பாக செயல்பட வேண்டும் இல்லையென்றால் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும் பழனிச்சாமியை பற்றி பேசுவது வேஸ்ட்,. காவல்துறை கவனத்துடன் செயல்பட்டு இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
சின்னம்மா எப்போது வெளியே வருவார் என்ற கேள்விக்கு
சட்டரீதியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம் உரிய தருணத்தில் வெளியே வருவார்கள்
சின்னம்மா வெளியே வந்தால் பழனிசாமி கம்பெனியை தான் ஆதரிப்பார்கள் என்ற தகவலை பழனிச்சாமி கம்பெனி பரப்பி வருகிறது,அவர்கள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கண்டு பயப்படுகிறார்கள்,
சின்னம்மாவும் நானும் என்றைக்கும் இந்த துரோகிகளோடு இணைவதற்கு வாய்ப்பில்லை.இங்கே
சுயநலத்தோடு வந்தவர்களும் பதவி அதிகாரத்திற்காக வந்தவர்களும், போய்விட்டார்கள்
அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களோடு இருக்கிறார்கள்
வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம் என்றார்! -
மக்கள்செல்வர் அண்ணன் டிடிவி தினகரன்MLA அவர்கள்



