அ.ம.மு.கவினால் அதிமுகவிற்கு சேதாரம் ஆனது உண்மை தான் என்று அதிமுக செம்மலை,MLA அவர்கள் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பதிவு பெற்ற பிறகு நடைபெற்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து வருகிறது. பொதுச் சின்னமும் பெறாமல் ஒரு இயக்கமாக ஆரம்பிக்க பட்டு இதுநாள்வரை தொடர்ந்து பல நெருக்கடிகளை சந்தித்து வந்த மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் தேர்தல் அறிவித்த தேதி முதல் சில நாட்களிலேயே அதிக அளவில் வேட்பாளர்களை நிறுத்திய ஒரே கட்சி என்ற சாதனையை பெற்றது..
தேர்தலில் போட்டியிட்ட சில இடங்களில் எதிர் வேட்பாளர்கள் நிறுத்த முடியாமல் திமுக அதிமுக போன்ற பெரிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தாமல் திணறியது. இதனால் போட்டியின்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் திணறி வருகிறது.



